ஹுமாயூன் சக்கரவர்த்தி பீர் முகமது மாஹ்வி எனும் கவிஞருக்கு ஒரு குதிரையைப் பரிசளித்தார்.
அது மிக மட்டமான குதிரை. அதைப் பற்றி பீர் முகமது சொன்னார்:
“சக்கரவர்த்தி அவர்களே! நீங்கள் எனக்குப் பரிசாக அளித்த குதிரை நான் அதன்மேல் நாலடி சவாரி செய்தால், அது அடுத்த நாலு அடிகளுக்கு என்மேல் சவாரி செய்ய விரும்புகிறது. ஹுமாயூன், கவிஞர் அன்வாரி என்பவருக்கும் ஒரு கிழக் குதிரையைப் பரிசளித்தார். அது மறுநாளே இறந்துவிட்டது”
கவிஞர் அரசரிடம், ''அரசே! நீங்கள் எனக்குப் பரிசளித்த குதிரை மிக வேகமாகச் செல்லக் கூடியது; அதனால் அது பூமியிலிருந்து சுவர்க்கத்திற்கு ஒரே தாவாகத் தாவிச் சென்றுவிட்டது'' என்றார்.