பக்கத்து வீட்டுப் பையன் பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அந்த வீட்டுக்காரர் அவனிடம் கேட்டார்:
''தம்பி, உனக்குப் பரீட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?''
''சொல்லுங்க அங்கிள் தெரிஞ்சிக்கிறேன்''
''தம்பி, பரீட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க''
''ம்ம்ம்ம்''
''முதல் ஒரு மணிநேரத்துல 10 மார்க் கேள்விகள எழுதணும்''
''ம்ம்ம்ம்''
''இரண்டாவது ஒரு மணி நேரத்துல 5 மார்க் கேள்விகள எழுதணும்''
''ம்ம்ம்ம்''
''அப்புறம் அரை மணி நேரத்துல 2 மார்க் கேள்விய எழுதணும்''
''ம்ம்ம்ம்''
''கடைசி அரை மணி நேரத்துல ஒரு மார்க் கேள்விய எழுதணும். இதுல ஏதாவது உனக்குச் சந்தேகமிருந்தா கேளு''
''எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் இருக்கு அங்கிள்''
''என்ன?''
''மூன்று மணி நேரமும் கேள்விகளையே எழுதிகிட்டிருந்தா பதில்களை எப்ப எழுதறது?''