ஓர் உயரதிகாரி, ''என்ன படிச்சு என்ன பயன்? ஒரு வேலையைக்கூட ஒழுங்காச் செய்யத் தெரியல, எனக்குன்னு வந்து வாச்சிருக்கியே?'' என்றெல்லாம் ஓர் ஊழியரைக் கண்டித்துக் கொண்டிருந்தார்.
உயரதிகாரி நல்லவர்தான். கோபமே கொள்ள மாட்டார். இன்றோ, இப்படி!
அலுவலகம் மொத்தமும் கவனித்துக் கொண்டிருந்தது. அந்த ஊழியரோ, தலை குனிந்தபடி வேதனையுடன் நின்றிருந்தார். தொடர்ந்து மேலும் குற்றஞ்சாட்டிக் குறை சொல்லிவிட்டு,
''உன்னைக் கூறிக் குற்றமில்லை. எனக்குத் தர்ற மாதிரியே உனக்கும் தண்டமா சம்பளம் தருகிறார்களே, அவர்களைச் சொல்லணும்'' என்றார்.
அலுவலகத்தில் இருந்த அத்தனை பேரும், 'கொல்' எனச் சிரித்தனர்.
சிரித்தபடி தலையை நிமிர்த்திய ஊழியர், ''இனிமேல் ஒரு தவறுமின்றி வேலை செய்கிறேன்'' என்றார்.