லண்டனில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சுதந்திரத்தோடு மேடையேறிப் பேசலாம்.
ஒரு நாள் காலை ஒருவர் கர்ஜித்துக் கொண்டிருந்தார்:
''நாடு நன்றாக இருக்க ஒரே வழி பாராளுமன்றத்தைக் கொளுத்த வேண்டும்! பக்கிங்ஹாம் அரண்மனையைக் கொளுத்த வேண்டும்!''
கூட்டம் அதிகமாகி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
ஒரு போக்குவரத்துக் காவலர் கத்தினார்:
''போக்குவரத்துக்கு வழி விடுங்கள். பாராளுமன்றத்தைக் கொளுத்த வேண்டும் என்பவர்கள் வலப்பக்கம் போங்கள். பக்கிங்ஹாம் அரண்மனையைக் கொளுத்த வேண்டும் என்பவர்கள் இடப்பக்கம் போங்கள்''
சிரித்தபடி கூட்டம் கலைந்தது.