ஒரு சிறுவன் நாள் முழுதும் விளையாடிக் கொண்டிருந்தான். ஒன்றும் சாப்பிடாததால் மாலையில் அவனுக்கு வயிறு வலித்தது. மருத்துவரிடம் கொண்டு சென்றார்கள்.
மருத்துவர், “இவனுக்கு ஒன்றுமில்லை. நாள் முழுவதும் வயிறு காலியாக இருந்தது. அதனால் வலி ஏற்பட்டுள்ளது. சாப்பிட்டால் சரியாகிவிடுவான்" என்றார். சிறுவனும் சாப்பிட்டான். வலியும் போய்விட்டது.
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சிறுவனின் தந்தைக்கும் தலைவலி வந்தது. அவர் தவித்தார். உடனே சிறுவன், “அப்பாவுக்கு ஏன் தலை வலிக்கிறது தெரியுமா? என் வயிறு காலியாக இருந்தது. வயிறு வலித்தது. அப்பாவோட தலையிலும் ஒண்ணுமில்லே, அதுதான் அவருக்குத் தலைவலி. நான் சாப்பிட்டதும் வலி போனது. அப்பாவும் காலியான தலையை நிரப்பினால் எல்லாம் சரியாகிவிடும்" என்றான்.