ஜேம்ஸ்தர்பார் அமெரிக்க எழுத்தாளர். தமது கட்டுரைகளுக்குத் தாமே படம் போடுவார். வயதானதால் கண் பார்வை போய்க் கொண்டிருந்தது. அப்போதும் நகைச்சுவையுடன் எழுதுவதை நிறுத்தவில்லை.
அவர் கல்லூரி மாணவனாக இருந்தபோது, பாரசூட் படையில் சேர ராணுவம் எல்லா மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்தது.
அந்த விளம்பரத்தில் "மாணவர்களே! இந்த சாலையைக் கடப்பதை விட பாராசூட் மூலம் குதிப்பது அப்படி ஒன்றும் ஆபத்தான செயலல்ல; எனவே பயப்படாமல் பாராசூட் படையில் சேருங்கள்” என்று இருந்தது.
ஜேம்ஸ்தர்பார் தினமும் அந்த விளம்பரத்தைப் படிப்பார்; யோசிப்பார்; பிறகு போய் விடுவார்.
இதைக் கவனித்து வந்த அவரது பேராசிரியர், "பாராசூட் படையில் சேர என்ன யோசனை?” என்று கேட்டார்.
ஜேம்ஸ்தர்பார், "சேரலாம் என்றுதான் நினைக்கிறேன். ஆனால் அந்த ராணுவ அலுவலகம் இந்தச் சாலையின் எதிர்ப்புறத்தில் இருப்பதால் சாலையைக் கடந்து செல்லப் பயமாக இருக்கிறது” என்றார்.