புலவர் கீரன் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
கூட்டத்தில் ஒருவர், "பழனி போன்ற மலைக்கோயிலுக்கு ஏறும் போது கீழே உள்ள கல்லைப் 'படி' என்று மிதிக்கிறோம். ஆனால் அதே போன்ற கல்லை 'கடவுள்' என்று எப்படி வழிபடச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
கீரன் அவரிடம் ஒரு கையில் வெற்றுக் காகிதத்தையும், மறுகையில் 100 ரூபாயையும் கொடுத்து, "இந்த இரண்டுமே தாள்தான். இந்த வெற்றுக் காகிதத்தைக் கடையில் கொடுத்தால் எதுவும் வாங்க முடியாது. ஆனால் இந்த நூறு ரூபாய் தாளைக்கடையில் கொடுத்தால் பல பொருட்களை வாங்கலாம். ஏனெனில், இதில் நம் அரசாங்க முத்திரை உள்ளது. இந்தத் தாளின் மதிப்பை அரசாங்கம் அங்கீகரித்திருக்கிறது. இதே போன்று, வெறும் கல்லாக இருந்தால் மிதிபடுவதும், அதுவே கண், காது, மூக்கு, வாய், முகம், கை, கால் என்று உருவ அமைப்புகளுடன் இருந்து தெய்வ சாந்நித்தியமும் இருந்தால் அதைக் கடவுளாக வழிபடுகிறோம்” என்றார்.