பெர்னாட்ஷா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது ஆசிரியர் ஒருவர் ‘மீண்ட சொர்க்கம்’ (Paradise Gain) என்ற மில்டனின் கவிதையை நடத்திக் கொண்டிருந்தார்.
இடையில் அவர் மாணவர்களிடம், “உங்களில் எத்தனை பேருக்குச் சொர்க்கம் செல்ல ஆசை? ஆசையுள்ளவர்கள் எழுந்திருங்கள்" என்றார்.
பெர்னாட்ஷாவைத் தவிர மற்ற எல்லோரும் எழுந்து நின்றனர்.
ஆசிரியர் ஷாவைப் பார்த்து, “உனக்குச் சொர்க்கம் செல்ல ஆசை இல்லையா?" என்றார்.
உடனே பெர்னாட் ஷா, “எனக்கும் சொர்க்கம் செல்ல ஆசைதான். ஆனால் இவர்கள் எல்லாம் அங்கு சென்றால், அது சொர்க்கமாகவா இருக்கும்?" என்றார்.