சமையலறையில் தன் தாய் பாத்திரம் துலக்குவதை சிறுமி பார்த்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று தன் தாயின் தலை முடியில் சில வெள்ளை முடிகளைப் பார்த்து வியப்படைந்து கேட்டாள், ''அம்மா, உன் தலையில் சில முடிகள் வெள்ளையாகி விட்டனவே, ஏனம்மா?''
அம்மா கூறினாள், ''நீ ஒவ்வொரு முறையும், குறும்பு செய்து, அழுது அடம் பிடித்து, என்னை வருந்தும்படி செய்யும் போதெல்லாம் என் முடி ஒவ்வொன்றாக வெளுப்பாகி விடுகிறது...''
சிறுமி யோசனையில் ஆழ்ந்தபடி கேட்டாள்:
''அம்மா, பாட்டியின் தலை முடி முழுவதும் வெள்ளையாகி விட்டதே, அது எதனால் அம்மா?''