பிரிட்டிஷ் பொருளாதார அறிஞரான ஹெரால்ட் வாஸ்கியின் பேச்சைக் கேட்க பாதிரியார் லாவேஸ் வந்திருந்தார்.
"மிஸ்டர் வாஸ்கி, நீங்கள் சொல்கிற ஜனநாயகக் கொடுமைகள் ஜெர்மனியிலேதானே நடக்கின்றன. நீங்கள் அங்கே போய்ப் பேசாமல் இங்கே லண்டனில் ஏன் வீணாகப் பேசுகிறீர்கள்?” என்று வினவினார்.
வாஸ்கி ஆத்திரப்படவில்லை. "புனிதத் தந்தையாரே! தாங்கள் கூட மக்களை நரகத்திலிருந்து காப்பாற்றத்தான் பாடுபடுகிறீர்கள். பின்னே அங்கே போகாமல் இங்கே இருந்து கொண்டு ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள்?” என்று திருப்பிக் கேட்டார்.
பாதிரியார் லாவேஸ் அசட்டுப் புன்னகையுடன் வாயடைத்து அமர்ந்து விட்டார்.