யாருக்கு யார் தரிசனம்?
ரமண மகரிஷி ஒருமுறை வழக்கம் போல அருணாச்சல மலையை வலம் வந்து கொண்டிருந்தார்.
அவரிடம் பற்றுதல் கொண்ட ஒருவர் அவர் பின்னாலேயே வேகமாக ஓடிவந்து ரமண மகரிஷியின் முன்னால் நின்று, "நான் உங்கள் தரிசனத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இன்று நீங்கள் தரிசனம் கொடுத்துவிட்டீர்கள்"என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
ரமண மகரிஷி உடனே, "நான் எங்கே தரிசனம் கொடுத்தேன்? நீங்கள்தானே என் முன்னால் வந்து நின்று எனக்கு தரிசனம் கொடுத்தீர்கள்" என்று சொன்னார்.
- டி.எஸ்.பத்மநாபன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.