ஆசிக்கு எவ்வளவு தூரம்?
ஒருமுறை அமெரிக்க பக்தர்கள் சிலர் ரமண மகரிஷியைத் தரிசிக்கச் சென்றார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் பின் வரிசையில் இருந்தார்கள்.
அவர்கள் மகரிஷியிடம் அவரது அருளைப் பெற முன்னால் வந்து அமரலாமா? என்று கேட்டார்கள்.
மகரிஷி, "நீங்கள் முன்னால் வந்து அமர்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் எனது அருள் தூரத்தைப் பொருத்தது அல்ல, நீங்கள் பக்கத்தில் இருந்தாலும் தூரத்தில் இருந்தாலும் என் ஆசி இருக்கும்." என்று சொன்னார்.
- டி. எஸ். பத்மநாபன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.