வீட்டில ஹவுஸ்புல் போர்டு
தேனி.எஸ்.மாரியப்பன்
மனைவி: என்னங்க... நம்ம கல்யாண நாளைக் கூட மறந்து விட்டீர்களே...!
அப்பாவி சுப்பையா: உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விசயத்தை மறக்க மாட்டேன்னு...!
*****
ஒருவர்: காது கேட்கலன்னுதானே சொன்னீங்க... கண்ணாடி போட்டுட்டு வர்றீங்க...?
அப்பாவி சுப்பையா: தெரியாத்தனமா கண் டாக்டர்கிட்ட போயிட்டேன்.
*****
ஒருவர்: நான் தற்கொலை பண்ணிக்கலாமுன்னு இருக்கேன்...
அப்பாவி சுப்பையா: பேசாம நீங்க ஒரு ஆஸ்பத்திரியில சேர்ந்திடுங்க...!
*****
ஒருவர்:அந்த டாக்டர்கிட்ட மட்டும் இவ்வளவு கூட்டம் அலை மோதுதே... அவ்வளவு கைராசிக்காரரா?
அப்பாவி சுப்பையா: அங்கதான் சூப்பரான நர்சுகளை வேலைக்கு வைத்துள்ளார்.
*****
மனைவி: என்னங்க சட்டையெல்லாம் எண்ணெய்யா இருக்கு...?
அப்பாவி சுப்பையா: ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேல கொஞ்சம் சாய்ந்திருந்தாள்...!
*****
ஒருவர்: என்ன சார் கல்யாண வீட்டில வந்து என் செருப்பைப் போடறீங்க...?
அப்பாவி சுப்பையா: உங்களுக்கு முன்னாடியே இதை நான் பார்த்து வைத்து விட்டேங்க...!
*****
ஒருவர்: உங்க வீட்டுக்கு முன்னால "ஹவுஸ் புல்" ன்னு போர்டு போட்டிருக்கீங்களே... எதுக்கு?
அப்பாவி சுப்பையா: லீவுக்கு வீட்டுக்கு வந்த பிள்ளைங்களால வீடு நிறைந்து விட்டுதுங்க...
*****
வங்கி அதிகாரி: உங்களுக்கு என்ன வகையான லோன் வேணும்?
அப்பாவி சுப்பையா: திருப்பிக் கட்டாத லோன் கொடுங்க...!
*****
ஒருவர்: சாப்பிட்டுக்கிட்டிருக்கும் போதே பாதி பந்தியிலே திடீர்னு ஏன் எழுந்திட்டீங்களே ஏன்?
அப்பாவி சுப்பையா: கூட்டம் கலையறதுக்குள்ள போனால்தான் நல்ல செருப்பா "செலக்ட்" பண்ணி எடுக்க முடியும்.
*****
ஒருவர்: துண்டு கேட்டா வேட்டியைக் கொடுக்கிறீங்களே...?
அப்பாவி சுப்பையா: இந்த வேட்டியை இரண்டு முறை தண்ணீரில் போட்டாலே துண்டாகி விடுமே.!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.