முத்துக்கமலம் இதழ் குறித்த குறிப்பு
தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள பாட நூல்களில், மேல்நிலை முதலாமாண்டு சிறப்புத் தமிழ்ப் பாடநூலில் ’செயற்களம்’ பிரிவில் ‘4. இணைய ஊடகம் - உருவாக்கமும் பயன்பாடும்’ எனும் தலைப்பிலான பாடத்தில் ’இணைய இதழ்களில் படைப்புகள்’ எனும் தலைப்பின் கீழ் எட்டு இதழ்கள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. அதில் ‘முத்துக்கமலம்’ இதழ் 6 ஆவது குறிப்பாக இடம் பெற்றிருக்கிறது.
“முத்துக்கமலம்: ஒரு பொழுதுபோக்கு இதழுக்குரிய பொதுவான தகவல்களுடன் வெளிவருகிறது இவ்விதழ். மின்புத்தகங்கள், வலைப்பூக்கள் தொடர்பான தகவல்களைத் தருகின்றது. இதுவும் இந்தியப் பல்கலைக்கழக மானியக்குழுவால் ஏற்பளிக்கப்பட்ட இதழ்”
*****
மேல்நிலை முதலாமாண்டு, சிறப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தின் முதற்பக்கம்
மேல்நிலை முதலாமாண்டு, சிறப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தின் பதிப்பு விவரங்கள் (முதல்பதிப்பு-2018, திருத்திய பதிப்பு - 2019)
முத்துக்கமலம் இதழ் குறித்த குறிப்பு
(மேலே, பச்சை நிறத்தில் கட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது)
இதன் மூலம் மேல்நிலை முதலாண்டு பயிற்றுவிக்கும் தமிழாசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இணையத்தில் முத்துக்கமலம் இணைய இதழினைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறைக்கும், மேல்நிலை முதலாமாண்டு, சிறப்புத் தமிழ்ப் பாடநூல் உருவாக்கத்திற்கான வல்லுநர்கள், மேலாய்வாளர்கள், கலை மற்றும் வடிவமைப்புக்குழுவினர், பாடநூல் உருவாக்கக் குழுவினர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் அனைவருக்கும் நன்றி.
- ஆசிரியர் குழுவினர்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.