இஞ்சி, புதினா சர்பத்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. எலுமிச்சைப்பழம் - 1 எண்ணம்
2. இஞ்சி - 1 துண்டு
3. புதினா இலை - சிறிது
4. நன்னாரி சர்பத் - 4 கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. இஞ்சி, புதினா இலை உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும்.
2. அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, அதில் எலுமிச்சைசாறு, நன்னாரி சர்பத் ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு கப்தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
3. பின்னர் வடிகட்டி கொண்டு, அதனை வடிகட்டி பிரிஜ்ஜில் வைத்துக் குளிரூட்டிப் பின்னர் பருகலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.