புதினா இஞ்சி எலுமிச்சை சர்பத்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. எலுமிச்சைப் பழம்- 1 எண்ணம்
2. இஞ்சி (சிறியது) -1 துண்டு
3. புதினாஇலை - 8 எண்ணம்
4. நன்னாரி சர்பத் - 50 மி.லி
5. உப்பு - தேவையான அளவு
6. எலுமிச்சைத் தோல்- 1 சிறு துண்டு
செய்முறை:
1. எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
2. எலுமிச்சைச் சாறு, நன்னாரி சர்பத், இஞ்சி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.
3. புதினாஇலை,உப்பு, எலுமிச்சைத் தோல் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அரைக்கவும்.
4. பின்னர் அதனை வடிகட்டி, இரண்டு கோப்பை தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு: குளிர்ச்சி விரும்புபவர்கள், குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் குளிரூட்டிப் பருகலாம் அல்லது பனிக்கட்டிகளைச் சேர்த்துப் பருகலாம்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.