சோடா எலுமிச்சை சர்பத்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. சோடா - 1 பாட்டில் (200 மி.லி)
2. எலுமிச்சை - 1 எண்ணம்
3. நன்னாரி சர்பத் - 50 மி.லி
4. புதினா - 3 எண்ணம்
5. எலுமிச்சைத் துண்டு - சிறிது
6. உப்பு / சர்க்கரை - சிறிது
செய்முறை:
1. ஒரு டம்ளரில் சிறிய எலுமிச்சை துண்டு, 5 புதினா இலைகள் சேர்த்து நசுக்கவும்.
2. அதன் மேல் 1 கரண்டி எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத் சேர்க்கவும்.
3. சோடாவைச் சேர்த்துக் கலக்கவும்.
4. சுவை மற்றும் விருப்பத்திற்கேற்ப உப்பு அல்லது சர்க்கரை சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.
குறிப்புகுளிர்ச்சி விரும்புபவர்கள், பனிக்கட்டித்துண்டுகளைச் சேர்த்துக் கொள்ளவும் அல்லது பிரிட்ஜில் வைத்துக் குளிரூட்டிப் பருகலாம்
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.