இட்லி சாம்பார்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாசிப்பருப்பு - 50 கிராம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
6. சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. வெந்தயத் தூள் - 1 தேக்கரண்டி
9. பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
11. மல்லித்தழை - சிறிது
12. நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
13. கடுகு - 1/2 தேக்கரண்டி
14. கறிவேப்பில்லை - சிறிது
15. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு போட்டு, தேவையான அளவு தண்ணிர் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைத்துத் தனியாக எடுத்து வைக்கவும்.
2. ஒரு வாணலியில் 3 மேசைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
3. கடுகு வெடித்தவுடன் கறிவேப்பில்லை, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
4. பின் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கவும்.
5. அதில்1 1/2 கப் தண்ணிர் சேர்த்து மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், வெந்தயத் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
6. பின்னர் வெந்த பருப்பைப் போட்டு, கொதித்து 2 நிமிடம் ஆனதும் மல்லித்தழையைப் போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.