துவரம் பருப்பு ரசம்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு - 100 கிராம்
2. தக்காளி - 2 எண்ணம்
3. பூண்டு -7 பற்கள்
4. குறு மிளகு -1 தேக்கரண்டி
5. சீரகம்- 2 தேக்கரண்டி
6. மஞ்சள்தூள் -1 சிட்டிகை
7. மிளகாய்வற்றல் - 3 எண்ணம்
8. புளி - எலுமிச்சம் பழம் அளவு
9. கருவேப்பிலை - சிறிதளவு
10. மல்லித்தழை - சிறிதளவு
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. துவரம் பருப்பைதண்ணீர் ஊற்றி குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த பருப்பை ஊற்றி, அதில் தக்காளியை நறுக்கிப் போடவும்.
3. ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை அளவு புளியைச் சிறிது தண்ணீர் ஊற்றி ஊற வைத்துப் பின்னர் கரைத்து வைக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு உளுந்து போட்டுத் தாளித்து, குறுமிளகு, சீரகம், மிளகாய் வற்றல், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
5. கரைத்து வைத்துள்ள பருப்புத் தண்ணீரை ஊற்றி அதில் சிறிதளவு மல்லித்தழையைத் தூவி நுரை வரும் வரை ஒரு கொதி விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.