மசாலா ரசம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. புளி - சிறிய எலுமிச்சை அளவு
2. சாம்பார் பொடி - 1/2 தேக்கரண்டி
3. தக்காளி - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. சீரகம் - 1/2 தேக்கரண்டி
6. மிளகு - 1/2 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
8. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
9. பூண்டு - 4 பற்கள்
10. பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. உப்பு - தேவையானஅளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
14. கறிவேப்பிலைச் - சிறிது
15. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. புளியைத் தண்ணீர் சேர்த்து ஊற வைத்துக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் தக்காளி, சிறிது கறிவேப்பிலை, மல்லித்தழை, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்.
3. அதில் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கைகளால் கரைத்துக் கொள்ளவும்.
4. அதன் பின்னர் சீரகம், மிளகு, பூண்டு பல், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு இடித்து எடுத்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்துத் தாளித்து இடித்து வைத்ததைச் சேர்த்து வதக்கிக் கலந்து வைக்கவும்.
6. இலேசாகக் கொதிக்க ஆரம்பித்ததும், மல்லித்தழை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.