கொள்ளு ரசம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சைக் கொள்ளு - 4 தேக்கரண்டி
2. தனியா - 2 தேக்கரண்டி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. மிளகு - 1 தேக்கரண்டி
5. தக்காளி - 1 எண்ணம்
6. புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
7. மிளகாய் வற்ற்ல் - 4 எண்ணம்
8. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
9. சின்ன வெங்காயம் - 15 எண்ணம்
10. பூண்டு - 10 பற்கள்
11. கடுகு - 1/2 தேக்கரண்டி
12. உப்பு - தேவையான அளவு
13. எண்ணெய் - தேவையான அளவு
14. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. கொள்ளை நன்றாக அலசி வைத்துக் கொள்ளவும்.
2. தனியா, சீரகம், மிளகு, மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் 5, பூண்டு 5, மஞ்சள்தூள், புளி, தக்காளி, உப்பு போட்டு நன்றாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்தக் கலவையைத் தண்ணீர் சேர்த்து ரசம் போல் வைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்துத் தாளித்து, அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதங்கியவுடன் அரைத்து வைத்திருக்கும் கலவையை அதில் ஊற்றவும்.
5. நன்றாக ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
6. கொதி வந்தவுடன் மல்லித்தழை சேர்த்து எடுத்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.