மோர் குழம்பு
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. தயிர் - 1 கோப்பை
2. தேங்காய் - 1/2 கோப்பை
3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
4. வெள்ளரிக்காய் - சிறிய துண்டு
5. இஞ்சி - சிறிய துண்டு
6. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்
7. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
8. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
9. சீரகம் - 1/2 தேக்கரண்டி
10. கடுகு - 1 தேக்கரண்டி
11. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
12. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
13. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
14. உப்பு - தேவையான அளவு
15. எண்ணைய் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கடாயில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள வெள்ளரிக்காய் துண்டுகளைப் போட்டு வேக வைக்கவும்.
2. கடலை பருப்பை 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
3. ஒரு மிக்சி ஜாரில் துருவி வைத்துள்ள தேங்காய், சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் ஊறிய கடலைப் பருப்பு இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில், வேக வைத்துள்ள வெள்ளரிக்காய், அரைத்து வைத்திருக்கும் தேங்காய், மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து விட்டு நன்றாக கொதிக்க வைத்துக் கீழே இறக்கி வைக்கவும்.
5. தயிரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
6. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்துத் தாளித்து இறக்கவும்.
7. தாளிசத்துடன் மோர், வேக வைத்த வெள்ளிக்காயுடன் சேர்த்த கலவையை நன்றாகக் கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.