சாம்பார்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. துவரம் பருப்பு – 1 கோப்பை
2. தக்காளி – 2 எண்ணம்
3. சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
4. காய்கறிகள் (முருங்கைக்காய், கத்தரிக்காய்) – 1 கோப்பை
5. சாம்பார் தூள் – 2 தேக்கரண்டி
6. புளி – நெல்லிக்காய் அளவு
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. பெருங்காயம் - சிறிது
9. கறிவேப்பிலை - சிறிது
10. மல்லித்தழை - சிறிது
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
2. புளியைச் சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. பின் காய்கறிகளைச் சேர்த்து, சாம்பார் தூள் மற்றும் உப்பு போட்டு வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
5. காய்கறிகள் வெந்ததும், புளிக் கரைசலை ஊற்றிப் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
6. கடைசியாக வேக வைத்தப் பருப்பை ஊற்றி, மிதமான தீயில் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, மல்லித் தழை தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.