* துவரம் பருப்புடன் சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து சாம்பார் வைத்தால், சாம்பார் சுவையாக இருக்கும்.
* இட்லி, தோசைக்குச் சட்னி அரைக்கும் போது இரண்டு அல்லது மூன்று புதினா இலைகள் அல்லது சிறிது மல்லித் தழைகளைச் சேர்த்து அரைத்தால், சட்னி நல்ல மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
* சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது, அரை கப் தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
* உப்புமா செய்யும்போது வெங்காயத்துடன் சிறிதளவு முந்திரியையும் சேர்த்து வதக்கினால் சுவையாக இருக்கும்.
* எந்த குழம்பிலும் இறுதியாக ஒரு துண்டு வெல்லம் அல்லது சிறிது சர்க்கரை சேர்த்து இறக்கினால், தனிச்சுவையாக இருக்கும்.
* சாம்பார் தயாரிக்கும் போது பீர்கங்காய் அல்லது மரவள்ளிக்கிழங்குத் துண்டுகளை நறுக்கிச் சேர்த்தால் வித்தியாசமான சுவையோடு இருக்கும்.
* பிரியாணி, புலாவ் அல்லது குருமா வகைகளில் வறுத்த வெங்காயத்தை மேலே தூவி இறக்கினால் சுவை அதிகரிக்கும்.
* எலுமிச்சைச் சாதத்தில்பச்சை மிளகாய்க்குப் பதிலாக இஞ்சியைத் துருவி வதக்கிச் சேர்த்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
* தக்காளிப் பச்சடி, கீரை மசியல் செய்யும் போது கடுகுக்குப் பதில் சீரகத்தைச் செர்ர்த்துத் தாளித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
* கரைத்த மாவு தோசை செய்யும் போது, அதில் மிளகு, சீரகப்பொடியைக் கலந்து செய்தால் மிளகு தோசை போன்று சுவையாக இருக்கும்.
* வெண்டைக்காய் பொரியல் செய்யும் போது, புளித்த மோர் சேர்த்தால் பொரியல் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
* கேரட், பீட்ரூட் அல்வா செய்வதற்குச் சிறிது பால் பவுடர் சேர்த்துக் கிளறினால் அல்வாவின் சுவை கூடுதலாகும்.
* பீன்ஸ் பொரியல் செய்தால் கடைசியில் கொஞ்சம் வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* ஒரு கட்டு சிறுகீரைக்கு ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவைக்கு வேர்க்கடலையை நன்கு வறுத்து அதிகமாய் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* எந்த ஒரு பொரியல் செய்யும்போதும் அதில் சிறிதளவு சீரகம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* முட்டையில் ஆம்லெட் செய்யும் போது, முட்டையை நன்கு அடித்து அதனுடன் சிறிது கடலை மாவு சேர்த்துக் கொண்டால், ஆம்லெட் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
*தயிர் பச்சடியில் வெங்காயம் சேர்ப்பதற்கு பதிலாகக் கோவக்காயைச் சேர்த்தால் தயிர் பச்சடி வித்தியாசமான சுவையில் இருக்கும்.
* கோதுமை ரவை உப்புமா செய்யும் போது, தண்ணீர் சேர்ப்பதற்குப் பதிலாகத் தேங்காய்ப் பால் சேர்த்துச் செய்தால் சுவையாக இருக்கும்.
* பலகாரம் செய்த பிறகு மீதமாகும் கடலை எண்ணெய்யில் வாழைக்காய் வறுவல் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* வறுத்த வேர்க்கடலையைச் சிறிய துண்டுகளாக்கி பீன்ஸ் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்தால் சுவையாக இருக்கும் .