* வாழைக்காயைத் தண்ணீரில் முழுமையாக மூழ்கி வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
* சின்ன வெங்காயத்தை வெயிலில் சிறிது நேரம் உலர்த்தி எடுத்து வைத்தால் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.
* எலுமிச்சையை தினமும் ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்தால், ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
* உடைத்தத் தேங்காயில் சிறிது உப்பைத் தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
* இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி, தண்ணீர் இருக்கும் பாத்திரத்தின் மேல் வைத்தால் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
* சாம்பார் பொடியை அரைத்து, ஆறவிட்டு டப்பாவில் அடைக்கும் முன்னர் சிறிது விளக்கெண்ணைய்விட்டு கரண்டியால் பிசறி டப்பாவில் அடைத்துவைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* மிளகாயில் காம்பை நீக்கிவிட்டு, அதனை நெகிழித்தாளில் சுற்றி வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* வாழைப்பழத்தை ஈரத்துணியில் சுற்றி வைத்தால், கருப்பு நிறமாகாமல் கெடாமல் இருக்கும்.
* கோதுமை மாவைக் காற்றுப் புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்தாலே ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
* மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகப்பொடி, கரம் மசாலா, மஞ்சள் தூள், சோம்புப் பொடி, மிளகுத்தூள் போன்ற மசாலாப் பொருட்களை வெளியில் காற்றோட்டமாக வைத்தாலே கெடாமல் இருக்கும்.
* அரிசியை உலர்வாக ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் அது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
* கத்தரிக்காயை ஹாட் பாக்ஸில் வைத்து மூடினால் காய் வாடாமல் , நிறம் மாறாமல், கெடாமல் இருக்கும்.
* பழங்கள், ஊறுகாய் போன்றவைகளை காற்று புகாத கொள்கலன்களில் சேமித்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
* பாதாம் பருப்பு வைத்திருக்கும் பாத்திரத்தில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை போட்டு வைத்திருந்தால், பாதாம்பருப்பு நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
* கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை வாழை இலையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.
* துவரம் பருப்பு வேகவைக்கும் போது ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் காலையில் வைக்கும் சாம்பார் இரவுவரை கெடாமல் இருக்கும்.