* புதினா, தக்காளி இரண்டையும் நன்கு அரைத்து பஜ்ஜி மாவுடன் கலந்து செய்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும்.
* ரவை தோசை செய்யும் போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை சிவந்து மொறுமொறுப்பாக வரும்..
* பால் பாயாசம் செய்யும் போது, பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.
* சாம்பார் செய்வதற்கு பருப்பு வேகவைக்கும் போது, நெய் சேர்த்தால் சாம்பார் ருசியாக இருக்கும்.
* பூரி மாவில் தண்ணீருக்கு பதில் பால் சேர்த்து பிசைந்து ஊறவைத்தால் சுவையாக இருக்கும்.
* இட்லி மாவிற்கு உளுந்து அரைக்கும் போது, உளுந்துடன் ஐஸ் கட்டி இரண்டு துண்டு சேர்த்து அரைத்தால், வழக்கத்தை விட இட்லி மென்மையாக இருக்கும்.
* வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால், கடலை மாவு அல்லது கைப்பிடி அவல் கலந்து செய்தால் வடை பதமாக வந்துவிடும்.
* சாம்பார் வைக்கும் போது இறக்கும் தருவாயில் வெந்தயமும், பெருங்காயமும் வறுத்து பொடி செய்து போட்டு அத்துடன் சிறிது கசகசாவையும் சேர்த்து பொடி செய்து போட்டால் சாம்பார் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.
* இட்லி மாவில் ஒரு கரண்டி செய் சேர்த்தால், இட்லி மல்லிகைப்பூ போல் மிருதுவாக இருக்கும்.
* தோசை மாவில் உருளைக் கிழங்கை வேகவைத்து அரைத்து தோசை ஊற்றினால் தோசை நன்றாக வரும். சுவையாகவும் இருக்கும்.
* எந்த வகை சட்னி அரைத்தாலும் சிறிதளவு பூண்டு சேர்த்தால் மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.
* ரசத்தின் சுவை கூட தேங்காய் தண்ணீர் சேர்க்கலாம்.
* முறுக்கு, சீடைக்கு மாவை வெந்நீர் ஊற்றி பிசைந்து பொரித்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.
* தோசை மாவுக்கு உளுத்தம் பருப்புடன் ஒரு கப் ஜவ்வரிசியையும் கலந்து அரைத்தால் தோசை நன்கு வார்க்க வரும்.
* தேங்காய் துவையல் அரைக்கும் போது சிறிது இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
* சப்பாத்தி மாவு பிசையும் போது, அதனுடன் சிறிதளவு மக்காச்சோள மாவு சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நீண்ட நேரம் மிருதுவாக இருக்கும்.
* சாதம் சமைக்கும் போது 3 துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் வெள்ளை நிறத்துடனும், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலும் இருக்கும்.
* துவரம்பருப்பு வேகவைக்கும் பருப்புடன் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேகவைத்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
* பக்கோடா செய்யும்போது கடலைமாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவை பயன்படுத்தினால் சுவை கூடுவதோடு, வயிற்றுக் கோளாறுகள் வராது.
* வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து கலந்து வடை சுட்டு எடுத்தால், மிருதுவாகவும் எண்ணெய்யும் குடிக்காது.
* பலகாரங்களுக்கு பாகு காய்ச்சும் போது பதம் வந்ததும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் பாகு முறியாது.
* பால் பாயாசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயாசம் சுவையாக இருக்கும்.