முட்டைக் குழம்பு
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 6 எண்ணம்
2. வெங்காயம் - 10 எண்ணம்
3. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
4. தேங்காய் - ஒன்று (சிறியது)
5. வற்றல் - 5 எண்ணம்
6. சீரகம் - 1 தேக்கரண்டி
7. உப்பு, மஞ்சள்தூள் - சிறிது
8. மசாலாத்தூள் - தேவையான அளவு
9. கருவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. முட்டையை அவித்து உரித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக வெட்டி வைத்திருக்கும் வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
3. வதங்கிய பின் தேங்காய்ப் பாலில் அரைத்த மசாலா கரைத்து உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்க விடவும்.
4. குழம்பு நன்றாக வற்றி எண்ணெய் தெளியவும் வெட்டி வைத்திருக்கும் முட்டையில் குழம்பை ஊற்றி, மல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.