முட்டை 65
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. முட்டை - 6 எண்ணம்
2. தயிர் - 1/2 கோப்பை
3. மைதா மாவு - 1 மேசைக்கரண்டி
4. சோள (கார்ன்) மாவு - 1 மேசைக்கரண்டி
5. மிளகாய்த்தூள் - 11/2 தேக்கரண்டி
6. இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
7. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முட்டையை உடைத்து ஊற்றி, அதில் தேவையான உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
2. அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதன் நடுவே சிறிய பாத்திரத்தில் எண்ணெய் தடவி அடித்த முட்டையை ஊற்றி பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் வேகவிடவும்.
3. பாத்திரத்தை வெளியே எடுத்து ஆறிய பின்னர் முட்டையைத் தனியே எடுத்து விருப்பமான அளவில் வெட்டிக் கொள்ளவும்.
4. முதலில் அகலமான பாத்திரத்தில் மைதாமாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், இஞ்சி, பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு, உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலந்து 2 மணி நேரம் ஊற விடவும்.
5. பின் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முட்டைத் துண்டுகளைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்து சூடாகப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.