முட்டைப் பிரியாணி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாஸ்மதி அரிசி - 2 கப்
2. முட்டை - 5
3. வெங்காயம் - 25 கிராம்
4. தக்காளி - 100 கிராம்
5. பச்சைமிளகாய் - 4 எண்ணம்
6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
8. கரம் மசாலாப் பொடி - 1/2 தேக்கரண்டி
9. பட்டை, கிராம்பு, ஏலம், பிரியாணி இலை- தாளிக்க
10. புதினா, கொத்துமல்லி - கைப்பிடியளவு
11. எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு
முன் குறிப்புகள்
1.பாஸ்மதி அரிசியைக் கழுவி,அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
2. முட்டையைக் கெட்டியாக வேகவைத்து உரித்து வைக்கவும்.
செய்முறை:
1. குக்கர் பாத்திரத்தில் எண்ணெய்விட்டு, மெலிதாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
2. வெங்காயம் வறுபட்டதும் அதனுடன் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு வறுக்கவும்.
3. அத்துடன் நறுக்கிய பச்சை மிளகாய், தக்காளி, பாதியளவு மல்லி புதினா இலைகளைச் சேர்த்து வதக்கவும்.
4. பின்னர் அதில் பொடி வகைகளையும், தேவையான உப்பையும் சேர்த்து வதக்கவும்.
5. எண்ணெய் பிரிகிற நேரத்தில், வேகவைத்த முட்டையில், நீளவாக்கில் கீறி அதை மசாலாவுடன் சேர்த்து உடைந்து விடாமல் பிரட்டவும்.
6. ஊறவைத்த அரிசியை வடிகட்டி மசாலாக் கலவையுடன் சேர்க்கவும். அப்படியே சில நிமிடங்கள் வதக்கவும்.
7. வறுத்து வைத்த வெங்காயத்தையும் மீதமுள்ள மல்லி புதினாவையும் ஒன்றுக்கு ஒன்றரை என்ற விகிதத்தில் தண்ணீரையும் சேர்க்கவும்.
8. உப்பு, காரம் சரி பார்த்து, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விடவும்.
9. குக்கரை மூடி சிறுதீயில் 15 நிமிடங்கள் வைத்து இறக்கவும் (விசிலை எதிர்பார்க்க வேண்டாம்)
10. சுவையான, காரசாரமான முட்டை பிரியாணி தயார்
குறிப்புகள்:
வெங்காயம் அல்லது வெள்ளரிக்காய் தயிர்ப் பச்சடி வைத்துக் கொண்டால் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.