வாவல் மீன் வறுவல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. வாவல் மீன் - 1 கிலோ
2. மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
4. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
5. சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
7. உப்பு - தேவையானஅளவு
8. எண்ணெய் - தேவையானஅளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், இஞ்சி பூண்டு விழுது, எண்ணெய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாகக் கலந்து வைக்கவும்.
2. மீனைக் கழுவிச் சுத்தம் செய்து தண்ணீர் வடித்து வைக்கவும். மீன் துண்டின் மீது சிறிது கீறல் போட்டு வைக்கவும்.
3. தயார் செய் பேஸ்ட்டை மீனில் நன்றாக தடவவும்.
4. மீன் துண்டுகளை ப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வரை வைக்கவும்.
5. தோசைக் கல்லில் எண்ணெய் சேர்த்துச் சூடேறியதும், மீனை அதில் பரப்பி வைக்கவும்.
6. ஒரு புறம் வெந்ததும், மறு புறம் திருப்பிப் போட்டு பொறித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.