மிளகு மீன் மசாலா
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. மீன் - 1/2 கிலோ
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. பூண்டு - 10 பற்கள்
4. தக்காளி - 3 எண்ணம்
5. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
6. மிளகுத்தூள் - 2 தேக்கரண்டி
7. கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
9. நல்லெண்ணெய் - 1/2 கோப்பை
10. உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
1. பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. வாணலியில் 1/4 கோப்பை எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் அரைத்த விழுது, சிறிது உப்பு சேர்த்து சிறு நெருப்பில் 20 நிமிடங்கள் வரை பச்சை வாசனை போக வதக்கவும்.
3. நன்றாக வதங்கி எண்ணய் பிரிந்து வந்த பின், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள் சேர்த்துக் கலந்து விடவும்.
4. சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் மீன் துண்டுகளைப் போட்டு, தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
5. அதனுடன் மீதமிருக்கும் எண்ணெய் சேர்த்து சிறு நெருப்பில் வேக விடவும். மீன் வெந்த பின்பு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.