திணை பொங்கல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. திணை அரிசி - 250 கிராம்
2. பாசிப்பருப்பு - 50 கிராம்
3. மிளகு - 1/2 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5. நெய் - 1 மேசைக்கரண்டி
6. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
7. இஞ்சி - சிறிதளவு
8. கருவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. திணை அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும்.
2. பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்துக் கழுவிக் கொள்ளவும்.
3. அடுப்பில் குக்கரை வைத்து ஐந்து கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.
4. பிறகு பாசிப்பருப்பை போட்டு அரை வேக்காடு வேக வைக்கவும்.
5. அதனுடன் கழுவி வைத்துள்ள திணை அரிசி, தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும்.
6. குக்கரில் இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
7. தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டு அத்துடன் உடைத்த முந்திரி பருப்பைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
8. குக்கரில் ஆவி அடங்கியதும் வறுத்த முந்திரியை அதனுடன் சேர்க்கவும்.
9. ஒரு வாணலியில் சிறிது நெய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி தாளித்து அதனைப் ப்ங்கலுடன் சேர்க்கவும்.
10. பொங்கலுடன் மீதமுள்ள நெய்யை ஊற்றிக் கிளறிச் சிறிது நேரம் மூடி வைக்கவும்.
11. பொங்கல் சிறிது ஆறியவுடன் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.