தக்காளிச் சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி – 1 கோப்பை
2. தக்காளி – 3 எண்ணம்
3. வெங்காயம் – 1 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
6. புதினாத்தழை - சிறிது
7. மல்லித்தழை – சிறிது
8. பட்டை - 1 துண்டு
9. கிராம்பு - 2 எண்ணம்
10. ஏலக்காய் – 2 எண்ணம்
11. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
12. நெய் - 1 தேக்கரண்டி
13. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
1. தக்காளியைச் சிறிய துண்டுகளாகவும், வெங்காயம் மற்றும் மிளகாயை நீளவாக்கிலும் நறுக்கி வைக்கவும்.
2. குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்துத் தாளிக்கவும்.
3. அதன் பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
4. அடுத்து, தக்காளியைச் சேர்த்து தக்காளி குழையும் வரை வதக்கவும்.
5. தக்காளி வதங்கியதும், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
6. அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 2 கோப்பை தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.
7. தண்ணீர் கொதித்ததும் ஊற வைத்த பச்சரிசியைச் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.