முருங்கைக் கீரை துவையல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக் கீரை - 2 கோப்பை
2. உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
3. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
4. புளி - சிறிது
5. பூண்டு - 2 பல்
6. பெருங்காயத்தூள் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முருங்கைக் கீரையை நன்றாக் ஆய்ந்து, கழுவி எடுத்து வைக்கவும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், புளி, பெருங்காயத்தூள், பூண்டு சேர்த்து வறுத்து எடுத்து ஆற விடவும்.
3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முருங்கைக் கீரையைச் சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு ஆறவிடவும்.
4. மிக்ஸியில் முதலில் வறுத்து வைத்திருக்கும் உளுத்தம்பருப்பு, வற்றல், போட்டு கொஞ்சம் கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
5. அதனுடன் வதக்கி வைத்திருக்கும் முருங்கை கீரையைச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
குறிப்பு:
* சாதத்துடன் நெய் சேர்த்துப் பிசைந்தும் சாப்பிடலாம்.
* சாதம், சப்பாத்தி, தோசை, இட்லியு டன் தொட்டுச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.