புடலங்காய் தயிர் பச்சடி
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. புடலங்காய் (பொடியாக நறுக்கியது) - 1 கோப்பை
2. புளிப்பில்லாத தயிர்- 2 கோப்பை
3. கடுகு - 1 தேக்கரண்டி
4. சீரகம் - 1 தேக்கரண்டி
5 எண்ணெய் - தேவையான அளவு
6. சர்க்கரை - 1 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. மல்லித்தழை (பொடியாக நறுக்கினது) - சிறிது
9. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
10. பெருங்காயத்தூள் - சிறிது
செய்முறை:
1. புடலங்காயைப் பொடியாக நறுக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அடுப்பைச் சிறிதாக வைத்து நறுக்கிய புடலங்காய், சர்க்கரை, உப்பு சேர்த்து மூடி போட்டு மூடி வேக விடவும்.
3. மூடியைத் திறந்து, வெந்தப் புடலங்காயை ஒரு கோப்பையில் எடுக்கவும்.
4. வதக்கிய புடலங்காயைத் தயிரில் போடவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் போட்டுத் தாளிக்கவும்.
6. தாளிசத்தைப் பச்சடியில் சேர்த்து, நறுக்கிய மல்லித்தழை போட்டு நன்கு ஒன்று சேர்த்துக் கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.