பாகற்காய் பச்சடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பாவக்காய் (நறுக்கியது) - 1 கோப்பை
2. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
3. சாம்பார் தூள் - 1 தேக்கரண்டி
4. உப்பு - தேவையான அளவு
5. புளித்தண்ணீர் - 1 கரண்டி
6. வெள்ளை எள் - 4 கரண்டி
7. சர்க்கரை - 1 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கடுகு - 1/2 தேக்கரண்டி
10. உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
11. பெருங்காயத்தூள் - சிறிது
12. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. ஒரு பாகற்காயை கழுவி வட்ட வடிவமாக அரிசி கழுவிய தண்ணீரில் அரிந்து போடவும்.
2. பத்து நிமிடம் வரை கழுநீரில் இருக்கட்டும்.
3. பிறகு ஒரு வாணலியில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் பாகற்காயைப் போட்டு இலேசாக வதக்கிக் கொள்ளவும்.
4. பின்பு அதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ளவும்.
5. பிறகு அதில் புளித்தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
6. வெள்ளை எள்ளைச் சிவக்க வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.
7. காய் வெந்த பின்பு, அதில் ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை சேர்த்துக் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
8. கடைசியாக, பொடி செய்த எள்ளைச் சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
9. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.