காளான் மிளகுப் பிரட்டல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. மொட்டுக் காளான் - 250 கிராம்
2. வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. சோம்புத் தூள் - 1 தேக்கரண்டி
6. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
8. மிளகாய்த்தூள் - 1/4 தேக்கரண்டி
9. கரம் மசாலாத்தூள் - 1/4 தேக்கரண்டி
10. நல்லெண்ணை - 1 மேசைக் கரண்டி
11. கடுகு - 1/4 தேக்கரண்டி
12. சோம்பு - 1/4 தேக்கரண்டி
13. மிளகாய் வற்றல் - 1 எண்ணம்
14. கறிவேப்பிலை - சிறிது
15. மல்லித்தழை - சிறிது
16. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மொட்டுக் காளானைச் சுத்தம் செய்து, நறுக்கிச் சூடான தண்ணீரில் போட்டு இரண்டு நிமிடங்கள் விட்டுத் தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. கடாயை அடுப்பில் வைத்துச் சூடானதும், எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, சோம்பு, வற்றல், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
4. அத்துடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி, மசாலா பொடிகள் சேர்த்து வதக்கவும்.
5. பின்னர் நறுக்கி வைத்துள்ள மொட்டுக் காளானைச் சேர்த்து கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து,மூடி வைத்து, ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்
6. அதன் பின்பு, மிளகு, சோம்பு பொடித்த தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
7. அதனுடன் நறுக்கிய மல்லி இலை சேர்த்துக் கலந்து கலந்து இறக்கவும்.
குறிப்பு:சாதம், சப்பாத்தி, நாண் போன்றவற்றுக்குத் துணை உணவாகச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.