உருளைக்கிழங்கு வறுவல்
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு – 3 எண்ணம்
2. மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
3. மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி
4. கரம் மசாலாத் தூள் – 1/2 தேக்கரண்டி
5. மஞ்சள் தூள் – சிறிது
6. பூண்டு – 4 பற்கள்
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. சோம்பு - 1/3 தேக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து, துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, சோம்பு, மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்துத் தாளிக்கவும்.
3. நெருப்பைக் குறைத்து வைத்து, மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
4. வேகவைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளைச் சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
5. மசாலாக்கள் உருளைக்கிழங்கில் நன்றாக ஒட்டும் வரை மிதமான நெருப்பில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை சிவக்க வறுத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.