பச்சரிசி மாவு வடகம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு - 1 கோப்பை
2. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
3. எலுமிச்சை - 1/2 எண்ணம்
4. பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
5. உப்பு - தேவையானஅளவு
செய்முறை:
1. பச்சை மிளகாயை விழுதாக அரைத்து வைக்கவும்.
2. அடி கனமான பாத்திரத்தில் இரண்டரைக் கோப்பைத் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
3. தண்ணீர் கொதித்தவுடன் அரைத்து வைத்த பச்சை மிளகாய் விழுது, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும்.
4. கொதி வந்தவுடன் பச்சரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து சிறு நெருப்பில் கெட்டி சேர்ந்து விடாமல் கிளறவும்.
5. கடைசியில் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலந்து, சிறிது நேரம் ஆற வைக்கவும்.
6. உள்ளங்கையில் எண்ணெய் தடவி பாதி அளவு ஆறிய மாவை நன்றாக உருட்டி வைக்கவும்.
7. இதனைக் கொஞ்சமாக எடுத்து முறுக்கு அச்சில் சேர்த்து முறுக்கு பிழிந்து வெயிலில் ஒருநாள் காய வைக்கவும்.
8. வடகத்தை காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து வைக்கலாம்.
9. வடகம் தேவையான பொழுது சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.