வாழை இலை இடியாப்ப கொழுக்கட்டை
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. இடியாப்ப மாவு - 1/2 கிலோ
2. நாட்டு சர்க்கரை - 8 தேக்கரண்டி
3. தேங்காய்த் துருவல் - 1 கோப்பை
4. ஏலக்காய் - 1 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. வாழை இலை - சிறிது
செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும்.
2. அதில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
3. பிறகு அதில் ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறிவிட்டுப் பூரணத்தை இறக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
5. இடியாப்ப மாவில் சிறிது உப்பு, சேர்த்துக் கொள்ளவும்.
6. சிறிது சிறிதாகத் தண்ணீர் ஊற்றிக் கலந்து இடியாப்பம் பிழியும் பதம் வரும் வரை பிசையவும்.
7. இடியாப்ப (முறுக்கு) உலக்கில் மாவை வைத்து, சிறிய வாழை இலைத்துண்டில் சிறிது சிறிதாக இடியாப்பமாகப் பிழியவும்.
8. இடியாப்பத்தின் மேல் பூர்ணம் வைக்கவும்.
9. இட்லிப் பாத்திரத்தில் வைத்து 5 நிமிடம் அவிக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.