கார்த்திகை அவல் பொரி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 1/2 கோப்பை
2. பொரி - 1 1/2 கோப்பை
3. தேங்காய் - 1/2மூடி
4. வெல்லம் - 1 கோப்பை
5. பொரிகடலை - 2 மேசைக்கரண்டி
6. கருப்பு எள் - 1 மேசைக்கரண்டி
7. ஏலக்காய்த்தூள் - 1 கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. நெய் - 1 மேசைக்கரண்டி
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் சில்லுகளைப் போட்டு, நிறம் மாறும் வரை வதக்கித் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
2. இதே போன்று, பொரிகடலை, எள் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3. வெல்லத்தைப் பொடியாக்கி, அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சவும்.
4. அடுப்பை அனைத்து விட்டு, வதக்கி வைத்த தேங்காய், பொரிகடலை,எள், அவல், பொரி சேர்த்துக் கிளறவும்.
5. கடைசியாக ஏலக்காய்த் தூள், தேவையான உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.