பூசணிக்காய் அல்வா
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பூசணிக்காய் - 1 கோப்பை
2. சர்க்கரை - 3/4 கோப்பை
3. ஏலக்காய் - 15 எண்ணம்
4. நெய் - 1 கோப்பை
5. முந்திரி - 50 கிராம்
6. வெள்ளரி விதை - 3 மேசைக்கரண்டி
7. ஆரஞ்சு ரெட் புட் கலர் - சிறிது
8. ரோஸ் எசென்ஸ் - சிறிது
9. எலுமிச்சைச் சாறு - 1 கரண்டி
செய்முறை:
1. பூசணிக்காயை தோல் சீவி, துருவி நன்கு அழுத்தி அளந்து எடுக்கவும்.
2. அதை குக்கரில் போட்டு, தண்ணீர் எதுவும் விடாமல் மூடி வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.
3. ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து ஒரு முறை கலந்து கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் நெய் விட்டுச் சூடானதும், முந்திரிப் பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்.
5. பின் அதில் வெள்ளரி விதை சேர்த்து வறுத்து எடுக்கவும்.
6. பின் மீண்டும் சிறிது நெய் விட்டுச் சூடானதும் வேக வைத்த பூசணிக்காய் சேர்த்து வதக்கவும்.
7. மேலும் சிறிது நெய் விட்டுத் தண்ணீர் வற்றி வரும் வரை நன்கு வதக்கவும்.
8. பின் பூசணிக்காயை அளந்த அதேக் கோப்பையில் சர்க்கரையை அளந்து சேர்த்து நன்கு கிளறவும்.
9. சர்க்கரை இளகி பின் சேர்ந்து வரும் வரை நன்கு கிளறவும்.
10. பின் மீதமுள்ள நெய்யை ஊற்றிச் சூடாக்கி சூடான நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு கிளறவும்.
11. ஏலக்காய் உடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ளவும்.
12. அதனை அல்வா உடன் சேர்த்து நன்கு கிளறவும்.
13. சர்க்கரை இளகி பின் சேர்ந்து வரும் போது எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கிளறவும்.
14. அத்துடன் ஆரஞ்சு ரெட் புட் கலர் சேர்த்து நன்கு கிளறவும்.
15. பாத்திரத்தில் ஒட்டாமல் சுழண்டு வரும் போது மீதமுள்ள நெய்யை ஊற்றி வறுத்த முந்திரிப் பருப்பு, வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
16. அதில் ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு ஒரு முறை கிளறி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.