கந்தரப்பம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி -1 கோப்பை
2. புழுங்கல் அரிசி - 1/2 கோப்பை
3. உளுந்து – 1 மேசைக்கரண்டி
4. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
5. ஏலக்காய் -3 எண்ணம்
6. வெல்லம் (பொடித்தது) -1 கோப்பை
6. தேங்காய்த் துருவல் -1 மேசைக்கரண்டி
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. அரிசி மற்றும் பருப்பை நன்கு கழுவி வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
2. நீரை வடித்துவிட்டு மிருதுவாக அரைக்கவும்.
3. ஏலக்காய்,தேங்காய்த் துருவல் மற்றும் வெல்லப்பொடி சேர்த்து அரைத்தெடுக்கவும்.
4. வாணலியில் எண்ணைய்யைக் காய வைத்து, 1 கரண்டி அளவு மாவை எடுத்து நடுவில் மெதுவாக ஊற்றவும்.
5, ஓரங்களில் வெந்த பின்பு, திருப்பி விட்டு ஒரு நிமிடத்தில் எடுக்கவும்.
6. இதே போன்று மீதமுள்ள மாவையும் ஒன்றொன்றாகச் சுட்டு எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.