இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Ladies Only
மகளிர் மட்டும்

நோபல் பரிசு பெற்ற பெண்கள்

மு. சு. முத்துக்கமலம்

உலகில் வழங்கப்படும் பரிசுகளில் மிக உயர்ந்த பரிசாகவும், மதிப்பு மிக்கதாகவும் இருப்பது நோபல் பரிசு. சுவீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சியாளரும், தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபல் என்பவரால் 1895ல் எழுதி வைக்கப் பெற்ற ஒரு உயிலின்படி, சிறப்புமிக்க ஆய்வு மேற்கொண்டவர்கள், மனித சமூகத்திற்குப் பெரிதும் பயன் தரும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள், சமூகத்திற்குச் சிறப்பாகத் தொண்டாற்றியவர்கள், பொது அமைதிக்காகப் பாடுபடுபவர்கள் போன்றோருக்கு இந்த நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆல்பிரட் நோபல் உயிலில் குறிப்பிட்டிருந்ததை அடிப்படையாகக் கொண்டு 1900 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட நோபல் அறக்கட்டளை வழியாக, 1901 ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்குயியல், அமைதி மற்றும் பொருளாதாரம் எனும் ஆறு பிரிவுகளில் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்குயியல் மற்றும் அமைதிக்கான பரிசுகள் மட்டுமே ஆல்பிரட் நோபல் உயிலில் எழுதி வைத்திருந்தபடி, அவரது விருப்பப்படி வழங்கப்படும் பரிசுகள் ஆகும். பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பின்னர் இணைக்கப்பெற்ற ஒரு பரிசாகும்.

1968 ஆம் ஆண்டில், சுவீடன் நாட்டுத் தேசிய வங்கியானது 300-வது ஆண்டைக் கொண்டாடிய நிலையில், நோபல் அறக்கட்டளைக்கு நிரந்தர வைப்புநிதி ஒன்றை ஏற்படுத்தி, அதன் வழியாகப் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசினைத் தொடர்ந்து வழங்கிடக் கேட்டுக் கொண்டது. அதனைத் தொடர்ந்து, 1969 ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.

நோபல் பரிசு பெற்றவர்கள்

1901 முதல் 2025 வரை இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உடலியங்கியல், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் என்று ஆறு பிரிவுகளிலும் சேர்த்து 633 முறைகளில், 990 தனி நபர்கள், 28 அமைப்புகள் என்று மொத்தம் 1026 நபர்களுக்கும் அமைப்புகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.


பெண்கள்

நோபல் பரிசுகளில் 1901 முதல் 1920 வரையிலான காலத்தில் 4 பெண்களும், 1921 முதல் 1940 வரையிலான காலத்தில் 5பெண்களும், 1941 முதல் 1960 வரையிலான காலத்தில் 3 பெண்களும், 1961 முதல் 1980 வரையிலான காலத்தில் 7 பெண்களும், 1981 முதல் 2000 வரையிலான காலத்தில் 11 பெண்களும், 2001 முதல் 2020 வரையிலான காலத்தில் 28 பெண்களும், 2021 முதல் 2025 வரையிலான காலத்தில் 10 பெண்களும் என்று இதுவரை 68 முறை பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. இப்பரிசுகளில் மேரி கியூரி 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசையும், 1911 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசையும் பெற்றிருக்கிறார். எனவே, இதுவரை 67 பெண்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கின்றன.

இயற்பியல் - 5, வேதியியல் - 8, மருத்துவம் அல்லது உடலியங்கியல் - 14, இலக்கியம் - 18, அமைதி - 20, பொருளாதாரம் - 3 என்று மொத்தம் 68 பெண்கள் நோபல் பரிசுகளைப் பெற்றிருக்கின்றனர்.

இயற்பியல்

இயற்பியலுக்கான நோபல் பரிசினை 1903 ஆம் ஆண்டில் போலந்து நாட்டில் பிறந்து பிரான்சில் பணியாற்றிய மேரி கியூரி (Marie Curie) எனும் பெண்மணியும், 1963 ஆம் ஆண்டில் போலந்து நாட்டில் பிறந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றிய மரியா கோப்பர்ட் மேயர் (Maria Goeppert Mayer) எனும் பெண்மணியும், 2018 ஆம் ஆண்டில் கனடா நாட்டைச் சேர்ந்த டோனா ஸ்ட்ரிக்லேண்ட் (Donna Strickland) எனும் பெண்மணியும், 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியா கெஸ் (Andrea Ghez) எனும் பெண்மணியும், 2023 ஆம் ஆண்டில் பிரான்சில் பிறந்து சுவீடன் நாட்டில் பணியாற்றிய அன்னே எல்'ஹுல்லியர் (Anne L’Huillier) எனும் பெண்மணியும் என்று மொத்தம் ஐந்து பேர் பெற்றிருக்கின்றனர்.

வேதியியல்

வேதியியலுக்கான நோபல் பரிசினை 1911 ஆம் ஆண்டில் போலந்து நாட்டில் பிறந்து பிரான்சில் பணியாற்றிய மேரி கியூரி (Marie Curie) எனும் பெண்மணியும், 1935 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஐரீன் ஜோலியட் கியூரி (Irène Joliot-Curie) எனும் பெண்மணியும், 1964 ஆம் ஆண்டில் எகிப்து நாட்டில் பிறந்து, ஐக்கிய ராஜ்ஜியத்தில் பணியாற்றிய டோரத்தி குரோபுட் ஹோட்கின் (Dorothy Crowfoot Hodgkin) எனும் பெண்மணியும், 2009 ஆம் ஆண்டில் இஸ்ரேலைச் சேர்ந்த அடா ஈ. யோனாத் (Ada E. Yonath) எனும் பெண்மணியும், 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பிரான்செஸ் எச். அர்னால்டு (Frances H. Arnold) எனும் பெண்மணியும், 2020 ஆம் ஆண்டில் பிரான்சில் பிறந்து ஜெர்மனியில் பணியாற்றிய இம்மானுவேல் சார்பெண்டியர் (Emmanuelle Charpentier) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஜெனிபர் ஏ டவுட்னா (Jennifer A. Doudna) எனும் பெண்மணிகளும், 2022 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கரோலின் பெர்ட்டோசி (Carolyn Bertozzi) எனும் பெண்மணியும் என்று மொத்தம் எட்டு பேர் பெற்றிருக்கின்றனர்.


மருத்துவம் அல்லது உடலியங்கியல்

மருத்துவம் அல்லது உடலியங்கியல் பிரிவில் நோபல் பரிசினை 1947 ஆம் ஆண்டில் செக்கோஸ்லேவியாவில் பிறந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றிய கெர்ட்டி கோரி (Gerty Cori) எனும் பெண்மணியும், 1977 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ரோசலின் யாலோ (Rosalyn Yalow) எனும் பெண்மணியும், 1983 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பார்பாரா மெக்லிண்டாக் (Barbara McClintock) எனும் பெண்மணியும், 1986 ஆம் ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த ரீட்டா லெவி - மோண்டால்சினி (Rita Levi-Montalcini) எனும் பெண்மணியும், 1988 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஜெர்ட்ரூடு பி. எலியன் (Gertrude B. Elion) எனும் பெண்மணியும், 1995 ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டியான் நஸ்லின் வோல்கார்ட் (Christiane Nüsslein-Volhard) எனும் பெண்மணியும், 2004 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த லிண்டா பி. பக் (Linda B. Buck) எனும் பெண்மணியும், 2008 ஆம் ஆண்டில் பிரான்சைச் சேர்ந்த பிரான்கோயிஸ் பாரி - சினோயூசி (Françoise Barré-Sinoussi) எனும் பெண்மணியும், 2009 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் பிறந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றிய எலிசபெத் எச். பிளாக்பெர்ன் (Elizabeth H. Blackburn) மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கரோல் டபிள்யூ கிரீடர் (Carol W. Greider) எனும் இரு பெண்மணிகளும், 2014 ஆம் ஆண்டில் நார்வேயைச் சேர்ந்த மே பிரிட் மோசர் (May-Britt Moser) எனும் பெண்மணியும், 2015 ஆம் ஆண்டில் சீனாவைச் சேர்ந்த டூ யூயூ (Tu Youyou) எனும் பெண்மணியும், 2023 ஆம் ஆண்டில் ஹங்கேரியில் பிறந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணியாற்றிய (Katalin Karikó) எனும் பெண்மணியும், 2025 ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ. பிரன்கோவ் (Mary E. Brunkow) எனும் பெண்மணியும் என்று மொத்தம் பதினான்கு பேர் பெற்றிருக்கின்றனர்.

இலக்கியம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசினை 1909 ஆம் ஆண்டில் சுவீடனைச் சேர்ந்த செல்மா லேஜர்லப் (Selma Lagerlöf) எனும் பெண்மணியும், 1926 ஆம் ஆண்டில் இத்தாலியைச் சேர்ந்த கிரேசியா டெலிட்டா (Grazia Deledda) எனும் பெண்மணியும், 1928 ஆம் ஆண்டில் டென்மார்க்கில் பிறந்து நார்வேயில் வசித்த சிக்ரிட் அண்ட்செட் (Sigrid Undset) எனும் பெண்மணியும், 1938 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த பியர்ல் பக் (Pearl Buck) எனும் பெண்மணியும், 1945 ஆம் ஆண்டில் சிலியைச் சேர்ந்த கபிரீலா மிஸ்ட்ரல் (Gabriela Mistral) எனும் பெண்மணியும், 1966 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் பிறந்து சுவீடனில் வசித்த நெல்லி சாக்ஸ் (Nelly Sachs) எனும் பெண்மணியும், 1991 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நடின் கோர்டிமர் (Nadine Gordimer) எனும் பெண்மணியும், 1993 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த டோனி மாரிசன் (Toni Morrison) எனும் பெண்மணியும், 1996 ஆம் ஆண்டில் போலந்தைச் சேர்ந்த விஸ்லவா சிசம்போர்ஸ்கா (Wisława Szymborska) எனும் பெண்மணியும், 2004 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எல்பிரீடு செல்னிக் (Elfriede Jelinek) எனும் பெண்மணியும், 2007 ஆம் ஆண்டில் ஈரானில் பிறந்து ஐக்கிய ராச்சியத்த்தில் வசித்த டோரிஸ் லெஸ்ஸிங் (Doris Lessing) எனும் பெண்மணியும், 2009 ஆம் ஆண்டில் ரோமானியாவில் பிறந்து ஜெர்மனியில் வசித்த ஹெர்டா முல்லர் (Herta Müller) எனும் பெண்மணியும் 2013 ஆம் ஆண்டில் கனடாவைச் சேர்ந்த அலைஸ் முன்ரோ (Alice Munro) எனும் பெண்மணியும், 2015 ஆம் ஆண்டில் உக்ரைனில் பிறந்து பெலாரசில் வசித்த ஸ்வெட்லனா அலெக்ஸிவிக் (Svetlana Alexievich) எனும் பெண்மணியும், 2018 ஆம் ஆண்டில் போலந்தைச் சேர்ந்த ஓல்கா டோகர்சக் (Olga Tokarczuk) எனும் பெண்மணியும், 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த லூயிஸ் ஜீலக் (Louise Glück) எனும் பெண்மணியும், 2022 ஆம் ஆண்டில் பிரான்சைச் சேர்ந்த ஆன்னி எமாக்ஸ் (Annie Ernaux) எனும் பெண்மணியும், 2024 ஆம் ஆண்டில் தென் கொரியா எழுத்தாளர் ஹான் காங் (Han Kang) எனும் பெண்மணியும் என்று மொத்தம் பதினெட்டு பேர் பெற்றிருக்கின்றனர்.


அமைதி

அமைதிக்கான பரிசினை 1905 ஆம் ஆண்டில் செக் குடியரசில் பிறந்து, ஆஸ்திரியாவில் வசித்த பெர்த்தா ஒன் சட்னர் (Bertha von Suttner) எனும் பெண்மணியும், 1931 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த ஜேன் ஆதம்ஸ் (Jane Addams) எனும் பெண்மணியும், 1946 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த எமிலி கிரீன் பால்க் (Emily Greene Balch) எனும் பெண்மணியும், 1976 ஆம் ஆண்டில் வட அயர்லாந்தில் பிறந்து ஐக்கிய ராச்சியத்தில் வசித்த பெட்டி வில்லியம்ஸ் (Betty Williams) மற்றும் வட அயர்லாந்தில் பிறந்து ஐக்கிய ராச்சியத்தில் வசித்த மெய்ரீட் கோரிகான் (Mairead Corrigan) எனும் இரு பெண்மணிகளும், 1979 ஆம் ஆண்டில் வட மெசடோனியாவில் பிறந்து இந்தியாவில் வசித்த அன்னை தெரசா (Mother Teresa) எனும் பெண்மணியும், 1982 ஆம் ஆண்டில் சுவீடனைச் சேர்ந்த ஆல்வா மிர்டல் (Alva Myrdal) எனும் பெண்மணியும், 1991 ஆம் ஆண்டில் மியான்மரைச் சேர்ந்த ஆங் சான் சூ கை (Aung San Suu Kyi) எனும் பெண்மணியும், 1992 ஆம் ஆண்டில் கவுதமாலா நாட்டைச் சேர்ந்த ரிகோபெர்டா மென்சு (Rigoberta Menchú Tum) எனும் பெண்மணியும், 1997 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேந்த ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams) எனும் பெண்மணியும், 2003 ஆம் ஆண்டில் ஈரானைச் சேர்ந்த சிரின் எபாடி (Shirin Ebadi) எனும் பெண்மணியும், 2004 ஆம் ஆண்டில் கென்யாவைச் சேர்ந்த வங்காரி முதா மாதாய் (Wangari Maathai) எனும் பெண்மணியும், 2011 ஆம் ஆண்டில் லைபீரியா நாட்டைச் சேர்ந்த எல்லென் ஜான்சன் சர்லீப் (Ellen Johnson Sirleaf), லைபீரியா நாட்டைச் சேர்ந்த லெய்மா ஜிபோவி (Leymah Gbowee) மற்றும் யேமன் நாட்டைச் சேர்ந்த தாவக்கோல் கர்மான் (Tawakkol Karman) எனும் மூன்று பெண்மணிகளும், 2014 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிறந்து ஐக்கிய ராச்சியத்தில் வசித்த மலாலா யூசாப்ஜாய் (Malala Yousafzai) எனும் பெண்மணியும், 2018 ஆம் ஆண்டில் ஈராக்கைச் சேர்ந்த நடியா முரட் (Nadia Murad) எனும் பெண்மணியும், 2021 ஆம் ஆண்டில் பிலிப்பைன்சைச் சேர்ந்த மரிய ரெசா (Maria Ressa) எனும் பெண்மணியும், 2023 ஆம் ஆண்டில் ஈரானைச் சேர்ந்த நர்கீஸ் முகமதி (Narges Mohammadi) எனும் பெண்மணியும், 2025 ஆம் ஆண்டில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) எனும் பெண்மணியும் என்று மொத்தம் இருபது பேர் பெற்றிருக்கின்றனர்.


பொருளாதாரம்

பொருளாதாரத்திற்கான பரிசினை 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த எலினார் ஓஸ்ட்ராம் (Elinor Ostrom) எனும் பெண்மணியும், 2019 ஆம் ஆண்டில் பிரான்சில் பிறந்து அமெரிக்க ஐக்கிய நாட்டில் வசித்த எஸ்தர் டப்ளோ (Esther Duflo) எனும் பெண்மணியும், 2023 ஆம் ஆண்டில் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த கிளவுடியா கோல்டின் (Claudia Goldin) எனும் பெண்மணியும் என்று மொத்தம் மூன்று பெண்மணிகள் பெற்றிருக்கின்றனர்.

சுவையான தகவல்கள்

நோபல் பரிசு பெற்ற பெண்களில் 2014 ஆம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசாப்ஜாய் 17 வயதில் அமைதிக்கான பரிசினையும், 2018 ஆம் ஆண்டில் ஈராக்கைச் சேர்ந்த நடியா முரட் 25 வயதில் அமைதிக்கான பரிசினைப் பெற்றிருக்கின்றனர்.

போலந்து நாட்டைச் சேர்ந்த மேரி கியூரி எனும் பெண்மணி, 1903 ஆம் ஆண்டில் இயற்பியலுக்கான பரிசையும், 1911 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான பரிசையும் பெற்றிருக்கிறார். இருமுறை பரிசு பெற்ற இப்பெண்மணியின் மகளான பிரான்சு நாட்டைச் சேர்ந்த ஐரீன் ஜோலியட் கியூரி என்பவர் 1935 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான பரிசினையும் பெற்றிருக்கிறார். தாயும் மகளும் ஒரே துறையான வேதியியல் துறையில் இப்பரிசினைப் பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதே போன்று, வேதியியலுக்கான பரிசினை 2020 ஆம் ஆண்டில் இமானுவேல் சார்பெண்டியர் மற்றும் ஜெனிபர் ஏ. டவுட்னா எனும் இரு பெண்மணிகளும், 2009 ஆம் ஆண்டில் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான பரிசினை எலிசபெத் எச். பிளாக்பெர்ன் மற்றும் கரோல் டபிள்யூ கிரீடர் எனும் இரு பெண்மணிகளும், அமைதிக்கான பரிசினை 1976 ஆம் ஆண்டில் பெட்டி வில்லியம்ஸ் மற்றும் மெய்ரீட் கோரிகான் எனும் இரு பெண்மணிகளும், 2011 ஆம் ஆண்டில் எல்லென் ஜான்சன் சர்லீப், லெய்மா ஜிபோவி மற்றும் தாவக்கோல் கர்மான் எனும் மூன்று பெண்மணிகளும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/ladies/p28.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License