இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

செத்த எலியால் பணக்காரன் ஆக முடியுமா?

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருந்தான். அவன் ஒரு பரம ஏழை.அந்த ஊரிலேயே ஒரு பெரும் பணக்காரனும் இருந்தான்.

இளைஞனுக்கும் அந்தப் பணக்காரனைப் போல் தானும் பணக்காரனாக வேண்டும் என்கிற ஆசை வந்தது.

அந்தப் பணக்காரனிடம் சென்று அவனுடைய செல்வம் சேர்த்த விபரத்தைத் தெரிந்து கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணம் எழுந்தது.

உடனே அவன் அந்தப் பணக்காரன் வீட்டுக்குச் சென்றான்.

அவன் சென்ற நேரம், அந்த பணக்காரன் மிகவும் கோபத்துடன் இருந்தான். அவனுடைய தானியக் கிடங்கில் எலிகள் தொல்லை. நிறைய தானியங்கள் சேதமாகியதுடன் காலியாகியும் இருந்தது. எலியை அடிக்க ஆட்களை ஏவிவிட்டதில் ஒரே ஒரு எலி மட்டும்தான் அடிபட்டது.

அதை அவனிடம் காட்டிவிட்டு வெளியில் போட்டு வைத்தார்கள்.

"என்ன விஷயம்?"

"ஒன்றுமில்லை, ஐயா. நீங்கள் பணக்காரராகிய வழியை எனக்கும் சொல்லித் தரவேண்டும்"

"அதெல்லாம் சொல்லித் தெரியும் விசயமில்லை. அதெல்லாம் அதுவாக வரவேண்டியது. எல்லாம் புத்தி சாதுர்யம்தான். புத்தி சாதுர்யம் மட்டும் இருந்தால், அதோ கிடக்கிறதே, செத்த எலி... அதை வைத்தேப் பெரும் பணக்காரனாகி விடலாம்," என்றான்.

இளைஞனுக்கு ஏதோ பொறி தட்டியது.

உடனே இளைஞன் சொன்னான், "சரி ஐயா. அந்த செத்த எலியை என்னிடம் கொடுங்கள்", என்றான்.

"சரிசரி. எடுத்துட்டுப் போ", என்று பணக்காரன் விரட்டி விட்டான்.

இளைஞன் அந்த எலியை எடுத்துக் கொண்டு செல்லும் போது, ஒரு கடலை மண்டியைத் தாண்டிச் சென்றான். அந்த மண்டியின் உரிமையாளர் ஒரு பூனையை அருமையாக வளர்த்து வந்தான்.

அந்தப் பூனைக்கு அன்று சாப்பாடு ஏதும் வைக்கவில்லை. மறந்து போய்விட்டது. கடும்பசியால் கத்திக் கொண்டிருந்தது. மிகச் செல்லமாக வளர்த்த பூனை.

"தம்பி. அந்த எலியை என்னிடம் கொடுக்கிறாயா?" என்று மண்டிக்காரர் கேட்டார்.



இளைஞனும் அதைக் கொடுத்து விட்டான். பூனையும் மிகவும் சந்தோஷமாக எலியைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது.

மண்டிக்காரர் அந்த இளைஞனுக்கு பை நிறையக் கடலை கொடுத்தான்.

அதை வாங்கிச் சென்ற இளைஞன் வீட்டில் அந்த கடலையை வறுத்து ஒரு சிறு பானையில் குளிர்ந்த தண்ணீரில் கொஞ்சம் வெட்டிவேரைப் போட்டு எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியில் இருந்த மலைப்புறமாகச் சென்றான்.

அங்குதான் அந்த வட்டாரத்து விறகு வெட்டிகள் விறகுகளை வெட்டி விற்பனைக்குக் கொண்டு செல்வார்கள்.

இளைஞன் அங்கு ஒரு மரத்தடியில் கடலையைச் சிறிது சிறிதாகப் பிரித்து வைத்துக் கொண்டு விறகு வெட்டிகளுக்குக் கொடுத்தான். அவர்களும் கடலையைத் தின்றுவிட்டு களைப்பு நீங்க நீரருந்தி விட்டுச் சென்றார்கள்.

அவர்களிடம் காசு எதுவுமில்லை. அவர்கள் வெட்டிய விறகில் சில கட்டைகளை அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.

இளைஞன் தன் வீட்டுக்கு வந்த பிறகு, விறகில் ஒரு பகுதியை விற்றுவிட்டு மீதியை அடைந்து வைத்தான். காசுக்குக் கடலை வாங்கினான். அடுத்த நாளும் கடலை வியாபாரம். விசயமறிந்து இன்னும் பலர் வந்து கடலை வாங்கினர்.

சிலநாட்கள் கழித்து கடலையுடன் கட்டுச்சாதமும் எடுத்துச் சென்று அதனையும் விறகுக்குப் பண்டமாற்று செய்தான்.

ஏராளமாகச் சேர்ந்து விட்ட விறகை அடுக்கி வைக்க ஒரு கிடங்கை வாடகைக்குப் பிடித்தான்.

அந்த ஊரிலுள்ள பெரிய விறகுமண்டியில் நெருப்புப் பிடித்துவிட்டது. அனைத்து விறகுகளும் சாம்பலாகின. ஊரில் விறகே இல்லை.

அப்போது இளைஞனிடம் விறகு இருப்பதை அறிந்து அவனிடம் வாங்கினர்.

இதில் அவனுக்குப் பெரும்பணம் கிடைத்தது.

அவனே ஒரு பெரிய விறகுமண்டியும், காட்டின் ஓரத்தில் ஒரு சாப்பாட்டுக் கடையும் வைத்தான். பிறகு கடலை மண்டியையும் விலைக்கு வாங்கிக் கொண்டான்.



சில ஆண்டுகளில் அவன் செய்யக்கூடிய வியாபாரங்களுக்குத் தொடர்புடைய பல தொழில்களையும் ஏற்படுத்திக் கொண்டான்.

ஒருநாள் அந்தப் பழைய செல்வந்தனைப் பார்க்கச் சென்றான்.

ஒரு தங்கத் தாம்பாளத்தில் வைத்து பட்டுத்துணியால் மூடி எடுத்துச் சென்றான்.

அந்த செல்வந்தனிடம் வணக்கமாக நின்று தாம்பாளத்தை நீட்டினான்.

அதை வாங்கி, பட்டுத்துணியை நீக்கியபின் செல்வந்தன் அயர்ந்து போனான்.

அதில் ஒரு எலி இருந்தது.

சாதாரண எலியல்ல. தங்கத்தால் செய்யப்பட்ட எலி அது. அதன் கண்கள் இருக்குமிடத்தில் வைரங்கள் பதிக்கப் பட்டிருந்தன.

இளைஞன் சொன்னான்;

"நீங்கள் கொடுத்த செத்த எலியினால்தான் நானும் ஒரு செல்வந்தன் ஆகினேன்.

புத்தி சாதுர்யம் இருந்தால் செத்த எலியை வைத்தேப் பணக்காரனாகி விடலாம் என்று நீங்கள் சொன்னது என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அதை ஒவ்வொரு நாளும் பலதடவை எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.

இதற்காகக் கடுமையாக முயற்சியும் செய்தேன். புத்தியைப் பயன்படுத்திச் சாதுர்யமாக ஒவ்வொன்றையும் செய்தேன்.

இப்போது நீங்கள் கொடுத்த அந்த எலியைத் திருப்பித்தரவே வந்தேன். ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிக்க வேண்டும்"

அந்தப் பணக்காரன் அசந்து போனான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p115.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License