இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Parable
குட்டிக்கதை

சபரி அம்மையாரைப் பார்க்க வந்த ஸ்ரீராமர்

சபரி அம்மையார் ஒரு வேடனின் மகளாவார்.

அம்மையாரின் இளம் வயதில், திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட போது, அவரின் தந்தை ஆயிரக்கணக்கான ஆடுகளை விருந்துக்காகக் கொண்டு வந்திருந்தார். அவை கொல்லப்படுவதை எண்ணி அம்மையார் மிகவும் மனம் நொந்து போனார். உலக வாழ்க்கையின் மீது ஈடுபாடின்றி அவர் ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். எனவே, அம்மையார் தமக்குத் திருமண வாழ்வு வேண்டாம் என்று எண்ணி வனபிரஸ்தம் (தவமிருக்கும் வாழ்க்கை) மேற்கொண்டார்.

வனபிரஸ்தம் பூண்ட சபரி அம்மையார், ஆன்மீக வாழ்வுக்காகத் தன்னை அர்ப்பணம் செய்ய முடிவு எடுத்தார். மதங்கர் என்னும் முனிவர், அம்மையாரை தன் சிஷ்யையாக ஏற்றுக் கொண்டு அவருக்கு ‘பிரம்ம ஞானம்’ கற்றுத் தந்தார். குரு-பரம்பரை மரபுப்படி, மதங்க முனிவர் சபரி அம்மையாரைத் தன் மகளாக ஏற்றுக் கொண்டார். எனினும், அங்கு வாழ்ந்த ஒரு சில மக்கள் மதங்க முனிவரின் செயலை ‘ஆச்சாரமற்ற’ செயல் என்று கருதி அவரைப் பழித்தனர்.

அவர் ஒரு வேடனின் மகளைத் தன் சீடராக ஏற்றுக் கொண்ட செயலைக் கண்டித்தனர். எனினும், முழுமையான இறைஞானம் பெற்ற மதங்க முனிவர் அவர்களைப் பொருட்படுத்தவில்லை. எனினும் இதை எண்ணி சபரி அம்மையார் மிகவும் வருத்தப்பட்டார்.

“ஐயனே, என் குற்றம்தான் யாதோ? ஒரு வேடரின் மகளாகப் பிறந்ததுவோ? என்னால் உங்களுக்கு கலங்கம் வருவதை எண்ணி என் மனம் வாடுகின்றது” என்று அம்மையார் மதங்க முனிவரிடம் கூறினார்.

“கலங்காதே மகளே. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எல்லா உயிர்களும் சமம் தான் என்பதையும் பிறப்பால் யாவரும் தாழ்ந்தவர் இல்லை என்பதையும் இவர்கள் உணராதவரை இப்படி தான் பேசிக் கொண்டு தம்மையும் தம்மை சார்ந்தவரையும் துன்பத்தில் ஆழ்த்துவார்கள். இவர்களைப் பற்றி சிந்திப்பதை விடுத்து இறைவனைப் பற்றி சிந்திப்பாயாக...” என மதங்க முனிவர் சபரி அம்மையாருக்கு உபதேசம் செய்தார்.

காலங்கள் கடந்தன.

சபரி அம்மையும் அந்த ஆசிரமத்தில் மதங்க முனிவரின் மகளாகவும் சிஷ்யையாகவும் இருந்து பல ஆன்மீக அறிவுகளைக் கற்று தேர்ந்தார். முனிவரின் மகளாக இருந்து அவரின் பசுக்களைப் பராமரித்தல், உணவு தயாரித்தல், பூஜை செய்தல் போன்ற கடமைகளையும் செய்து வந்தார்.

ஒருநாள் மதங்க முனிவர், சபரியிடம் வந்து “மகளே, இறைவனிடம் செல்லும் காலம் எனக்கு நெருங்கிவிட்டது. இதுவரை என் சிஷ்யையாக உனக்கு ஆன்மீக அறிவை தந்த நான் என் மகளாக உனக்கு ஒன்றுமே கொடுத்ததில்லை...என்ன வேண்டும் கேள்?” என்றார்.


சபரி அம்மையும், “தந்தையே, இறைவனைக் காண எனக்கும் ஆர்வமுண்டு, எனவே என்னையும் உங்களோடு அழைத்துச் செல்லுங்கள்...” என்று கேட்டார்.

ஆனால், மதங்க முனிவர் “இல்லை மகளே, நீ வாழவேண்டும்... யாருக்கும் கிட்டாத பெரும்பேறு உனக்குக் கிட்டும்... உன்னுடைய தூய்மையான பண்புக்கும் பக்திக்கும் இறைவன் உன்னைக் காண வருவார். அதுவரை நீ காத்திருக்க வேண்டும்” என்று கூறி விடைபெற்றார்.

அந்த நாள் முதல் சபரி அம்மையும் இறைவனின் வருகைக்காகக் காத்துக் கிடந்தார். நாள்தோறும் வைகறையில் துயில் எழுந்து நீராடுவார். இறைவன் இன்று கண்டிப்பாக வருவார் என்ற உறுதியான நம்பிக்கையுடன், தூய்மையான அன்போடும் பக்தியோடும் இறைவனுக்காக மலர்களும் பழங்களும் பறித்து வருவார். காலங்களும் வேகமாக கடந்தன. சபரி அம்மையார் முதுமை நிலையை அடைந்தார். அவரின் உடல் வலிமை குன்றியது. கண்பார்வையும் மங்கியது. ஆயினும் அம்மையாரின் இறைநம்பிக்கை ஒருபோதும் குறையவே இல்லை.

ஒருநாள் சபரி அம்மையார் ஆற்றில் நீர் எடுக்கச் சென்றார். ஆற்றங்கரையின் பாறை மீது ஒரு மூடன் அமர்ந்து கொண்டிருந்தான். அந்த மூடன் வேத மந்திரங்களைப் பிழைப் பிழையாக ஓதுவதைக் கேட்ட சபரி அம்மையார் புன்னகைத்தபடி குடத்தில் நீரை நிரப்பிக் கொண்டிருந்தார். தன்னுடைய வேத உச்சாடனத்தில் இருக்கும் குறையை அறிந்த மூதாட்டி நகைப்பதைக் கண்ட அந்த மூடன் சிறிதளவும் கருணையின்றி சபரி அம்மையாரின் மீது ஒரு கல்லைக் கொண்டு எறிந்தான்.

சபரி அம்மையாரின் மீது கல் பட்டவுடன் ஒரு சொட்டு இரத்தம் ஆற்றில் விழுந்தது. உடனே, ஆறு முழுவதும் இரத்தம் ஆகிவிட்டது. இரத்த ஆற்றைக் கண்டு அந்த மூடன் திகைத்துப் போனான். சபரி அம்மையார் வேதனையோடு தன் ஆசிரமத்திற்குத் திரும்பி விட்டார்.

ஆற்று நீர் இரத்தமாக மாறிவிட்டதால் யாருக்கும் குடிநீர் இல்லாமல் போய்விட்டது. ஊர்மக்களும் பல யாகங்கள் செய்தனர், வேத மந்திரங்கள் ஓதினர். எதுவுமே வேலைக்கு ஆகவில்லை. இரத்த ஆறு அப்படியேதான் இருந்தது. முனிவர் ஒருவர் கங்கை நீரைக் கொண்டு வந்து ஆற்றில் கலந்தார், ஒரு மாற்றமும் இல்லை. யமுனை நீரைக் கொண்டு வந்து கலந்தார், அப்போதும் ஒரு மாற்றமும் இல்லை. இவ்வாறு பல முயற்சிகள் செய்து மன்றாடியும் ஆற்று நீர் தூய்மையாக மாறவில்லை. சபரி அம்மையாரைக் கல்லால் தாக்கிய மூடனும் தாகத்தில் வாடி வதங்கிப் போனான்.

அப்போது அவ்வழியே ஸ்ரீ இராமர் வந்து கொண்டிருந்தார். அவரின் வருகையை அறிந்த அந்த மூடன், அவரிடம் சென்று மன்றாடி எப்படியாவது ஆற்று நீரைத் தூய்மைப்படுத்த வழி கேட்டார்.

ஸ்ரீ இராமரும் புன்னகைத்தபடியே, “ஆற்றுநீரைத் தூய்மைப்படுத்த நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

“இராமபிரானே, உங்களின் திருவடிகள் பட்டாலே போதும். நீர் தூய்மையாகி விடும்” என்று அம்மூடன் மன்றாடினான்.

ஒரு மாற்றமும் நிகழவில்லை. இவ்வாறு அந்த மூடனின் வேண்டுகோளுக்கு இணங்க, சற்றும் முகம் சுளிக்காமல் பல முறை ஸ்ரீ இராமர் தம் திருவடிகளை நீருக்குள் வைத்தார். மீண்டும் ஒரு மாற்றமும் நிகழவில்லை. அனைவரும் குழப்பத்தோடு நின்றனர்.

அனைத்தையும் அறிந்த ஸ்ரீ இராமர், “இந்த ஆற்று நீர் எப்படி ரத்தமானது?” எனப் பணிவுடன் கேட்டார்.

உடனே அந்த மூடன் “வேடர் குலத்தைச் சேர்ந்த ஒரு மூதாட்டி இங்கே வந்து நீர் எடுத்துக் கொண்டிருந்தாள். அவளை நான் கல்லால் தாக்கினேன். அவளின் ரத்தம் பட்டு இந்த ஆறு ரத்தமாகியது” என நிகழ்ந்த அனைத்தையும் பெருமையாக விளக்கினான்.

அதைக் கேட்ட ஸ்ரீ இராமபிரான், தன் கைகளை இதயத்தின் மீது வைத்தபடியே “அப்படியென்றால், அந்தத் தாயின் ஒரு சொட்டு இரத்தத்தால்தான் இந்த ஆறு மொத்தமும் ரத்தமாக மாறியது என்று நினைத்தீரா?” என்று மூடனிடம் கேட்டார்.


மூடன் சற்றுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தான்.

ராமபிரான் தொடர்ந்தார், “வரும் வழியில் என் இருதயத்தின் மீது யாரோ கல்லெறிந்ததை உணர்ந்தேன். அதில் ஏற்பட்ட ரத்தம்தான் இந்த ஆற்றையே ரத்தமாக ஆக்கியது” என்றார்.

அதைக் கேட்ட அந்த மூடன் மனம் உடைந்து போனான். தன்னுடைய அறியாமையை எண்ணி மனம் கலங்கி ஸ்ரீ இராமரிடம் மன்றாடினார்.

“என் தவறையெல்லாம் உணர்ந்து விட்டேன் ராமா. இழிகுலத்தார் என்று எண்ணி அந்தத்தாயின் மீது எறிந்த சிறு கல் உன் இருதயத்தையே நோகடித்து விட்டதே. என்னுடைய இந்தப் பாவத்தை எப்படிப் போக்குவேன்” என்று கதறினான்.

“நான் இங்கு வந்ததே அந்தத் தாயை சந்திக்கத்தான். அந்த அம்மையாரை நான் காணவேண்டும்” என்று ஸ்ரீ இராமர் அன்போடு கேட்டார்.

ஸ்ரீ இராமரின் பெயரைக் கேட்ட சபரி அம்மையார் தன் ஆசிரமத்தில் இருந்து ஓடி வந்தார். ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்த இராமரைக் காண ஓடி வந்த சபரி அம்மையாரின் காலடி மணல் பட்டு ஆற்று நீர் மீண்டும் தூய்மையானது.

அதைக் கண்டு அனைவரும் திகைத்தனர்.

“கண்டீரோ? இப்போது சொல்லுங்கள், யார் தீண்டத்தகாதவர் என்று” என அங்கிருந்த மக்களிடம் ராமபிரான் கேட்டார்.

அனைவரும் வெட்கித் தலை குனிந்து நின்றனர்.

பலரும் ராமபிரானைத் தம் இல்லத்திற்கு அழைத்தனர். ஆயினும், ஸ்ரீ இராமர் சபரியின் அழைப்பிற்கு இணங்கி அவரின் ஆசிரமத்திற்குச் சென்றார். தம் ஆசிரமத்திற்கு வந்த ஸ்ரீ இராமருக்கு, இலைகளால் ஆன ஒரு பாத்திரத்தில் பழங்களை வைத்து வழங்கினார் சபரி அம்மையார்.

“கண்பார்வை மங்கிய கிழவி நான், இந்தப் பழம் பழுத்ததா? அல்லது காயா?” என அறிந்து கொள்ள சபரி அம்மையார் பழத்தை எடுத்துக் கடித்துச் சுவைத்தார்.

“ஆம், இது பழுத்த கனிதான்” என்றபடி ஸ்ரீ இராமருக்கு அன்போடு அவற்றை அளித்தார்.


ராமபிரானும் “அம்மையே, இக்கனிகளைப் போல் சுவையான கனிகளை இதற்கு முன்னர் நான் உண்டதே இல்லை. இக்கனிகளில் உம்முடைய அசையா நம்பிக்கையும், தூய்மையான பக்தியும் கலந்திருப்பதே அதற்குக் காரணம்” என புன்னகை மலர அப்பழங்களை ஸ்ரீ இராமர் உண்டார்.

சபரி அம்மையாரைக் கடிந்தவர்களும், அதைக் கண்டு திகைத்து போனார்கள். சபரி அம்மையாரின் அசையா நம்பிக்கைக்கும், தூய்மையான பக்திக்கும் மனம் உருகி அவருக்கு அருள்பாலித்தார் ஸ்ரீஇராமர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p1294.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License