வாய் சும்மா இருக்காது...!
ஒருவன் ஒரு ஆமையைக் கொல்ல பிரம்பால் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான்.
ஆமை சாகவில்லை. கல்லால் அடித்தான். கம்பால் பெருந்தடியால் அடித்தான் ஆமை சாகவில்லை.
அடுத்தவன் ஒருவன் அதைப் பார்த்துக் கொண்டே சென்றான்.
அவனோ ஜீவ ஹிம்சை பிடிக்காதவன் .நமக்கு ஏன் வம்பு என்று வாயை மூடிக் கொண்டான்.
இருந்தாலும் அவனுக்கு வாய் மட்டும் சும்மா இருக்காது. ஆமை அடிப்பவனிடம் வந்து நின்றுகொன்டான்.
”நாம நம் வாயால சொல்லக்கூடாது. நமக்கு ஏன் வம்பு. நாம அதைச் சொல்றது மகா தப்பு.”
ஆமையை அடித்துக் கொண்டிருந்தவன் இப்போது அவன் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினான்.
”ஆமையை மேல்புறத்தில் அடித்தால் எப்படி சாகும். அதைப் திருப்பிப் போட்டு அடித்தால்தான் சாகும்.அதைப் போய் எதுக்கு நம்ப வாயால சொல்றது. அந்தப் பாவம் எனக்கு எதுக்கு?” என்று நிறுத்தினான்.
ஆமை அடித்துக் கொண்டிருந்தவன் அடுத்த நொடியே அந்த ஆமையைத் திருப்பிப் போட்டு ஒரே அடியில் அதன் கதையை முடித்தான்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.