தலையாட்டினால் போதுமா?
ஒரு மௌலவியிடம் ஒரு நெசவாளி சில சாமான்களை ஒப்படைத்திருந்தான்.
சில நாட்களுக்குப் பிறகு அவன் அவற்றை வாங்கிச் செல்ல அவனிடம் வந்தான். மௌலவி சாஹிப் தன் வீட்டுத் திண்ணையில் தனது மாணவர்கள் முன் இருந்தார்.
அவன், “மௌலானா, நான் கொடுத்த பொருள்களைத் தாருங்கள்” என்று கேட்டான்.
தான் மாணவர்கள் பாடம் ஒப்புவிப்பதைக் கேட்டுவிட்டு வரும்வரை காத்திருக்குமாறு மௌலானா அவனைக் கேட்டுக் கொண்டார்.
அவ்விதமே அவன் ஓரிடத்தில் அமர்ந்தான்.
மௌலானா மாணவர்கள் பாடம் சொல்லும் போது, அதைக் கேட்கும் தோரணையில் அடிக்கடி தலையை முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டிருந்தார்.
இதைக்கண்ட அவன் பாடம் கேட்பதென்றால் தலையை ஆட்டுவதுதான் என்று முடிவுகட்டினான்.
அவரிடம் சொன்னான், ”எனக்குச் சற்று அவசரம். நீங்கள் எழுந்து சென்று என் சாமான்களை எடுத்து வாருங்கள். அதுவரை நான் உங்களிடத்தில் உட்கார்ந்து தலையை ஆட்டிக் கொண்டிருக்கிறேன்” என்று.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.