துன்பமா? என்னை விட்டுவிடு!
ஒரு முதியவர் தனது தொழுகைக்குப் பின் ஆண்டவனிடம் பிரார்த்திக் கொண்டிருந்தார். தன்னை நரக நெருப்பிலிருந்து காப்பாற்றிச் சுவர்க்கத்தில் சேர்க்குமாறு அவர் வேண்டினார்.
அவர் அருகில் இருந்த கிழவியொருத்தி, ‘இறைவா, இவர் வேண்டுவதில் நானும் பங்கு பெறும்படி செய்’ என்று வேண்டினாள்.
அதைக் கேட்ட கிழவர், ‘இறைவா, நான் தூக்குமேடையில் தொங்கி நெருப்பில் பொசுக்கும்படி செய்’ என்று வேண்டினார்.
உடனே கிழவி, “இறைவா, என்னை மன்னித்து விடு. இவர் கேட்பதிலிருந்து என்னைக் காப்பாற்று!” என்றாள்.
இதைக் கேட்ட அக்கிழவர் அவள் பக்கம் திருப்பிச் சொன்னார்: ”நல்ல பங்காளி இவள்! இன்பந் தருவதிலெல்லாம் இவள் என்னோடு பங்கு கொள்ள விரும்புகிறாள். ஆனால், என் துன்பங்களிலோ பங்கு பெற மறுக்கிறாள்”
-ஜாமி கதைகள்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.