ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள்.
அவளிடம் மூன்று பேரித்தம் பழங்களை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுத்தார்கள்.
அவள் அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக் கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள்.
அவர்கள் அந்தப் பேரித்தம் பழங்களைச் சாப்பிடுகின்றனர்.
தனக்குரியதை சாப்பிட அந்த பெண் நினைத்த போது அதையும் தங்களுக்குத் தரக் கேட்டு அந்தக் குழந்தைகள் அடம் பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிரித்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்து விட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள்.
இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப் பெரிதும் பாதித்தது.
இரவில் வீடு திரும்பிய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக் கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “அவள் நேரடியாக சுவனம் (சுவர்க்கம்) செல்வாள்” என்ற சுபச்செய்தியை தெரிவித்தார்.